Wednesday, April 22, 2015

நவீன தமிழ் அருஞ்சொற்பொருள்




A - வரிசை

ABACUS - மணிச்சட்டம்
ABBREVIATION - குறுக்கம்
ABDUCTION - ஆட்கடத்தல்
ABROAD - வெளிநாடு
ACCESSORY - துணைக்கருவி
ACCOUNTANT - கணக்கர்
ACORUS - வசம்பு
ACQUISITION - கையகப்படுத்தல்
ACRE - இணையேர்
ACROBAT, ACROBATICS - கழைக்கூத்து, கழைக்கூத்தாடி
ACT (OF LAW) - கட்டளைக்கோல், கட்டளைச்சட்டம்
ACTINIUM - நீலகம்
ACTIVITY - செய்கைப்பாடு
ADAM'S APPLE - கண்டம்
ADAPTATION (DRAMA, MUSIC ETC) - தழுவல்
ADHESION - ஒட்டுப்பண்பு
ADHESIVE- பசைமம்
ADJECTIVE - பெயர் உரிச்சொல்
ADRENAL GLAND, ADRENALINE - அண்ணீரகம், அண்ணீர்
ADVANCE (MONEY) - முன்பணம், உளவாடம்
ADVERB - வினை உரிச்சொல்
AERIAL (ANTENNA) - வானலை வாங்கி
AEROBRIDGE - விமானப் பாலம், வான்பாலம்
AEROGRAMME - வான்மடல்
AEROPLANE - விமானம், பறனை
AEROSOL - சொட்டூதி
AGENT - முகவர்
AGENCY - முகமையகம்
AGRICULTURAL TRACT - பானல்
AGRICULTURE - கமம், விவசாயம், வேளாண்மை
AIDS (ACQUIRED IMMUNO DEFICIENCY SYNDROME) - வேட்டைநோய், உடற்தேய்வு நோய்
AILERON - இரக்கைத் துடுப்பு
AIR - காற்று
AIR BAG - (காப்புக்) காற்றுப்பை
AIR-CONDITIONER - குளிரூட்டி, குளிர்சாதனம், பனிக்காற்றுப்பெட்டி
AIR-COOLER - காற்றுப் பெட்டி
AIR FRESHENER - காற்றினிமைத் திவலை
AIR MAIL - வானஞ்சல்
AIR POCKET - காற்று வெற்றிடம்
AIR WAYBILL - வான் பார‌ப்ப‌ட்டி
AIRCRAFT - வானூர்தி
AIRCRAFT CARRIER - விமானம் தாங்கி கப்பல்
AIRHOSTESS - விமானப்பணிப்பெண்
AIRLINE - வான்வழி
AIRLINER - முறைவழி விமானம், முறைவழி வானுர்தி
AIRPORT - பறப்பகம், வானூர்தி நிலையம், வானிலையம்
AIRSPACE - வானெல்லை
AIRWORTHINESS - பறத்தகுதி
AIRWORTHY - பறத்தகுதியுள்ள
ALARM, ALARM CLOCK - அலறி, அலறிக் கடிகாரம்
ALARM CHAIN (IN TRAIN) - அபாயச் சங்கிலி
ALBINO, ALBINISM - பாண்டு, பாண்டுமை
ALBUM - செருகேடு
ALBUMIN - வெண்புரதம்
ALBURNUM - மென்மரம்
ALCHEMIST, ALCHEMY - இரசவாதி, இரசவாதம்
ALCOHOL - சாராயம்
ALFALFA - குதிரை மசால்
ALGAE - நீர்ப்பாசி
ALIGN, ALIGNMENT - சீரமை, சீரமைவு
ALLERGEN, ALLERGY - ஒவ்வான், ஒவ்வாமை
ALLIGATOR - ஆட்பிடியன்
ALLOY - உலோகக் கலவை
ALMOND - பாதாம்
ALUM - படிகாரம்
ALUMINIUM - அளமியம்
AMATEUR - அமர்த்தர்
AMBULANCE - திரிவூர்தி
AMERICIUM - அமரகம்
AMMONIA - நவச்சாரியம்
AMMONIUM CHLORIDE - நவச்சார வாயு/வளி
AMPLITUDE MODULATION (AM) / MEDIUM WAVE (MW) - மதியலை
ANACONDA - ஆனைக்கொன்றான், யானைக்கொன்றான்
ANCHOR - நங்கூரம்
ANDROGEN - ஆண்மையூக்கி
ANESTHETIC - உணர்வகற்றி
ANIMATION - அசைப்படம்
ANISE - சோம்பு
ANKLE - கணுக்கால்
ANT-EATER - எறும்புதின்னி
ANTENNA (TRANMIT OR RECEIVE) - அலைக்கம்பம்
ANTENNA (AERIAL) - வானலை வாங்கி, அலைவாங்கி
ANTHANUM - அருங்கனியம்
ANTIMONY - கருநிமிளை, அஞ்சனம்
ANTHROPODA - கணுக்காலி
ANTONYM - எதிர்ப்பதம்
APARTMENT (BLOCK) - அடுக்ககம்
APE - கோந்தி
APPLE - குமளிப்பழம் / அரத்திப்பழம்
APPLE CIDER VINEGAR - அர‌த்தி நொதிக்காடி, அர‌த்திக்காடி
APPLAUSE - கரவொலி
APPLIANCE - உபகரணம்
APPRECIATION - நயத்தல், மெச்சல்
APRICOT - சக்கரை பாதாமி
APRIL - மீனம்-மேழம்
APPOINTMENT (JOB) - பணி அமர்த்தம்
APPOINTMENT (MEETING) - (சந்திப்பு) முன்பதிவு
APPROACH (v.) - அண்மு (வினைவேற்சொல்), அணுகு (வினைவேற்சொல்)
APRON (AIRPORT) - ஏற்றிடம்
APRON (KITCHEN) - சமயலுடை
AQUAMARINE - இந்திரநீலம்
ARBITRATION POWERS - யதேச்சாதிகாரம், மேலாண்மையுரிமை
ARC LAMP - வில் விளக்கு
ARCH - தோரணவாயில், வளைவு
ARCH-BISHOP - பேராயர்
ARCH-DIOCESE - பேராயம்
ARECANUT - பாக்கு
ARENA - கோதா
ARGON - இலியன்
ARMED - ஆயுதபாணி
ARMNAMENT - படைக்கலம்
ARREARS - ஆண்டைச்சிகை, நிலவுத்தொகை
ARROGANCE - ஆணவம், தெனாவெட்டு
ARROWROOT - கூவை
ARSENIC - பிறாக்காண்டம்
ARTERY - தமனி
ARTILARY - பீரங்கிப் படை
ARTHRITIS - கீல்வாதம், மூட்டுவாதம்
ARTISAN - கைவினைஞர்
ASAFOETIDA - பெருங்காயம்
ASBESTOS - கல்நார்
ASPARAGUS - தண்ணீர்விட்டான்
ASPHALT - நிலக்கீல்
ASSASINATION - வன்கொலை
ASSEMBLY (MANUFACTURING) - ஒன்றுகூட்டல்
ASSEMBLY (STRUCTURE) - கட்டகம்
ASSEMBLY-LINE - ஒன்றுகூட்டு வரிசை
ASSUMPTION - தற்கோள்
ASSURANCE - காப்பீட்டுறுதி
ASTEROID - சிறுகோள்
ASTROLOGY - ஐந்திரம்
ASTONISHMENT - திகைப்பு, ஆச்சரியம்
ASTRINGENT - துவர்ப்பி
ASTRONAUT - விண்வெளி வீரர்
AUGUST - கடகம்-மடங்கல்
AUTHENTICITY, AUTHENTIC - சொக்க(மான), சொக்கம்
ATTAIN (v.) - எய்து (வினை வேற்சொல்)
ATTENDANT - ஏவலாள்
ATHLETICS - தடகளம்
ATOL - பவழத்தீவு
ATOMIC BOMB - அணுகுண்டு
ATONEMENT - பரிகாரம், பிராயச்சித்தம்
AUDIO - கேட்பொலி
AUDIO-CASSETTE - ஒலிப்பேழை
AUTOMATIC TELLER MACHINE (ATM) - தானியங்கி பணவழங்கி
AUTOMOBILE - உந்துவண்டி, தானுந்து
AUTORICKSHAW - தானி
AUTUMN - கூதிர்காலம், இலையுதிர்காலம்
AQUA REGIA - அரசப்புளியம்
AVAILABLE, AVAILABILITY - கிடைக்கும், கிடைக்கப் பெறுதல்
AVALANCHE - பனிச்சரிவு
AVENUE - நிழற்சாலை
AVIATION - பறப்பியல்
AVIONICS - பறப்பு மின்னணுவியல்
AVOCADO - வெண்ணைப் பழம்
AXLE - இருசு, அச்சாணி

Wednesday, March 28, 2012

valligal


நீ தான் உலகம் என்று நினைத்த
ஒரு நொடியும் என்னை அழ வைத்தது...
காரணம் நான் அறியவில்லை...
என் மனசுக்கு தெரிய வில்லை 
உன்  மனம் என்னை வெறுக்கிறது என்று ....!

Tuesday, March 27, 2012

valigal

பார்த்தும் கண்கள் கலங்கி தான்
போயின....!
உன்னை சந்தித்த இடத்தை பார்த்து
வலிகள் கண்களுக்கு மட்டும் அல்ல
இதயத்திற்கும் தான்  உயிரே????
உன்னை பிரிய மனம் இல்லை
உயிர் இருக்கிறது எடுத்துக்கொள்

kathal

காதல் என் தாய்நாடு....!
காதல் இரு உயிரின் சுவாசம்..!
காதல் இருவரின் நான்கு கண்கள்....!
காதல் இறைவனின் பரிசு ..!
காதல் பைத்தியத்தின்  மறு பிறவி...!
காதல் சோகத்தின் கீதம் ..!
காதல் வறுமையின் பசி ...!
காதல் ஏமாற்றத்தின் தாய் ...!
காதல் அச்சு இல்லாத வண்டி...!
காதல் முள் இல்லாத கடிகாரம் ...!
காதல் திசை மாறிய படகு ...!
காதல் மை இல்லாத பேனா...!
மொத்தத்தில் காதல் புரியாத புதிர்...!

காதலை அறிந்தவன் புத்திசாலி
காதலை அறியாதவன் திறமைசாலி

                                                                      மகாலட்சுமி .பா   

Monday, February 20, 2012

HAPPY

ஆயிரம் உறவுகள் தேடி
அலைந்து திரிந்தது ஒரு
காலம் .......
தோழமை தேடாமல் கிடைத்த
ஒரு வசந்தம் ...!
கனவுகளுடன் கைகோர்த்து
நினைவுகள் நிஜமாகின்றன....!
என் அம்மா அப்பாவை அனுப்பிய
இறைவனுக்கு நன்றி

Friday, February 17, 2012

muthal kavithai

கோடில் இருந்து புறப்பட்ட
சுறாவளி கவிங்கனே...
உன் புகழ் சொல்ல  அகரத்தில்
வார்த்தை இல்லை என்னிடம்
நமது ஊர் வரலாற்றிலும் இதிகாசத்திலும்
இடம்பெற்றது .......!
உன்னை(உங்களை ) போன்ற கவிங்கனை
 பெற்றதால்...!
நீங்கள் "சிறந்த ஆசான்"(வீ தேவராஜன் ) மட்டும் அல்ல...!
எனக்கு நல்ல தந்தையும் தான்

Thursday, February 16, 2012

ninavugal

நினைவுகள் மட்டும் இல்லைஎன்றால்
இதயமும் ஒரு கல்லறை தான்